வரலாற்றில் இன்று

 வரலாற்றில் இன்று

                              (11.08)

கிரிகோரியன் ஆண்டின் 223 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 224 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 142 நாட்கள் உள்ளன.

*நிகழ்வுகள்*

கிமு 3114 - பல முன்-கொலம்பிய இடையமெரிக்கப் பண்பாடுகள், குறிப்பாக மாயா நாகரிகம் ஆகியன பயன்படுத்திய இடையமெரிக்க நீண்ட கணக்கீட்டு நாள்காட்டி ஆரம்பம்.

கிமு 2492 - ஆர்மீனியா நிறுவப்பட்டது.

355 - நாட்டுத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட குளோடியசு சில்வானசு உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவித்தான்.

1786 - மலேசியாவில் பினாங்கில் கப்டன் பிரான்சிஸ் லையிட் பிரித்தானியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்.

1804 - புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரான்சிசு ஆஸ்திரியாவின் முதலாவது மன்னராக முடி சூடினார்.

1812 - இலங்கையில் பேராதனை தாவரவியற் பூங்கா அமைக்கப்பட்டது.

[1]

1898 - எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படையினர் புவேர்ட்டோ ரிக்கோவின் மயாகுவேசு நகரினுள் நுழைந்தனர்.

1920 - லாத்வியாவின் அதிகாரத்தை உருசியாவிடம் வழங்கும் உடன்பாடு எட்டப்பட்டது.

1945 - கிராக்கோவ் நகரில் போலந்து மக்கள் யூதர்களுக்கு எதிரான வன்முறைகளை நடத்தினர்.

1952 - உசைன் பின் தலால் யோர்தானின் மன்னராக அறிவிக்கப்பட்டார்.

1954 - கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை மாவட்டங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் பங்கு பற்றிய 16 தமிழர்கள் காவற்துறையினரால் சுடப்பட்டு மாண்டனர்.

1960 - சாட் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1961 - இந்தியாவின் முன்னாள் போர்த்துக்கீசப் பகுதிகளான தாத்ரா, நகர் அவேலி ஆகியன இணைக்கப்பட்டு தாத்ரா மற்றும் நகர் அவேலி என்ற ஒன்றியப் பகுதி ஆக்கப்பட்டது.

1962 - வஸ்தோக் 3 விண்கலம் பைக்கனூரில் இருந்து ஏவப்பட்டது. அந்திரியன் நிக்கொலாயெவ் நுண்ணீர்ப்பு விசையில் மிதந்த முதல் மனிதர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.

1965 - கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலசு நகரில் வாட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 34 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

1968 - பிரித்தானியாவின் நீராவித் தொடருந்து தனது கடைசிப் பயணிகள் சேவையை நடத்தியது.

1972 - வியட்நாம் போர்: அமெரிக்காவின் கடைசித் தாக்குதல் படையினர் தென் வியட்நாமை விட்டு வெளியேறினர்.

1975 - கிழக்குத் திமோர்: திமோர் சனநாயக ஒன்றியத்தின் புரட்சி, மற்றும் உள்நாட்டுக் கலகத்தை அடுத்து போர்த்துக்கீசத் திமோரின் ஆளுநர் மாரியோ லெமோசு பெரெசு தலைநகர் டிலியைக் கைவிட்டு வெளியேறினார்.

1979 - உக்ரைனில் இரண்டு ஏரோபுளொட் விமானங்கள் வானில் மோதிக் கொண்டதில் அவற்றில் பயணம் செய்த அனைத்து 178 பேரும் உயிரிழந்தனர்.

1982 - தோக்கியோவில் இருந்து ஒனலூலு நோக்கிச் சென்ற பான் ஆம் விமானத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார், 5 பேர் காயமடைந்தனர்.

1984 - தேர்தல் பரப்புரைக்காக வானொலி ஒன்றில் தனது குரலை சோதிப்பதற்காக அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் "எனது சக அமெரிக்கர்களே, உருசியாவை அழிப்பதற்கான சட்டவாக்கத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிட நேரத்தில் குண்டுவீச்சு ஆரம்பமாகும் "எனக் கூறினார்.

1999 - ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது.

2003 - ஆப்கானித்தானுக்கு அமைதி காக்கும் படையை நேட்டோ அமைப்பு அனுப்பியது.

2006 - யாழ் குடாநாட்டையும் இலங்கையின் தென்பகுதியையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை காலவரையறையின்றி மூடப்பட்டு யாழ்ப்பாண மக்கள் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டனர். 2009 இலேயே மீண்டும் திறக்கப்பட்டது.

2012 - கிழக்கு அசர்பைஜானில் தப்ரீசு நகருக்கருகில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் குறைந்தது 306 பேர் உயிரிழந்தனர், 3,000 பேர் காயமடைந்தனர்.

2017 - எகிப்து, அலெக்சாந்திரியாவில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதிக்கொண்டதில் 41 பேர் உயிரிழந்தனர்.

*பிறப்புகள்*

1833 - இராபர்ட் கிரீன் இங்கர்சால், அமெரிக்க அரசியல்வாதி, (இ. 1899)

1837 - மரீ பிரான்சுவா சாடி கார்னோ, பிரான்சின் 4வது அரசுத்தலைவர் (இ. 1894)

1897 - எனிட் பிளைட்டன், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1968)

1912 – ஏவா அகுனெர்ட் உரோகுல்ப்சு, செருமானிய வானியலாளர் (இ. 1954)

1920 - மைசூர் வீ. துரைசுவாமி ஐயங்கார், வீணை இசைக்கலைஞர் (இ. 1997)

1923 - ரஞ்சன் ராய் டேனியல், இந்திய இயற்பியலாளர் (இ. 2005)

1937 - ஜான் ஆபிரகாம், திரைப்பட இயக்குநர் (இ. 1987)

1940 – கி. லோகநாதன், மலேசியத் தமிழறிஞர் (இ. 2015)

1943 - பெர்வேஸ் முஷாரஃப், பாக்கித்தானின் 10வது அரசுத்தலைவர்

1950 - ஸ்டீவ் வாஸ்னியாக், ஆப்பிள் நிறுவனர்

1959 - தர்மரத்தினம் சிவராம், இலங்கை ஊடகவியலாளர், நூலாசிரியர் (இ. 2005)

1961 - டேவிட் புரூக்சு, அமெரிக்க எழுத்தாளர்

1965 - வியோல டேவிஸ், அமெரிக்க நடிகை

1983 - கிறிஸ் ஹெம்ஸ்வர்த், ஆத்திரேலிய நடிகர்

1985 - ஜாக்குலின் பெர்னாண்டஸ், பகுரைன்-இலங்கை நடிகை

*இறப்புகள்*

கிமு 480 - முதலாம் லியோனிடாசு, கிரேக்கப் பேரரசர்

1253 - அசிசியின் புனித கிளாரா, இத்தாலிய கிறித்தவப் புனிதர் (பி. 1194)

1259 – மோங்கே கான், மொங்கோலியப் பேரரசர் (பி. 1208)

1747 - விஜய ராஜசிங்கன் - கண்டி நாயக்க மன்னன்

1854 - மாசிடோனியோ மெலோனி, இத்தாலிய இயற்பியலாளர் (பி. 1798)

1880 - ராமச்சந்திரா, இந்திய கணிதவியலாளர், உருது மொழிப் பத்திரிகையாளர் (பி. 1821)

1890 - ஜான் ஹென்றி நியூமன், ஆங்கிலேய கருதினால் (பி. 1801)

1908 - குதிராம் போஸ், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1889)

1919 - ஆண்ட்ரூ கார்னேகி, இசுக்கொட்டிய-அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1835)

1920 - ஜெ. எம். நல்லுசாமிப்பிள்ளை, சைவ அறிஞர் (பி. 1864)

1956 - ஜாக்சன் பாலக், அமெரிக்க ஓவியர் (பி. 1912)

2011 - சி. வி. ராஜசுந்தரம், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1927).

Comments