வரலாற்றில் இன்று
வரலாற்றில் இன்று (15.08 ) ஆகஸ்டு 15 (August 15) கிரிகோரியன் ஆண்டின் 227 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 228 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 138 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1040 – ஸ்கொட்லாந்தின் மன்னன் முதலாம் டங்கன் மக்பெத்துடனான போரில் கொல்லப்பட்டான். 1057 – ஸ்கொட்லாந்தின் மன்னன் மக்பெத் மூன்றாம் மால்க்கமுடனான போரில் கொல்லப்பட்டான். 1915 – பனாமா கால்வாய் திறக்கப்பட்டது. 1920 – வார்சாவில் இடம்பெற்ற போரில் போலந்து இராணுவத்தினர் சோவியத் படைகளை வென்றனர். 1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் சரணடைந்தது. 1945 – இரண்டாம் உலகப் போர்: கொரியா விடுதலை பெற்றது. 1947 – முகமது அலி ஜின்னா பாகிஸ்தானின் முதலாவது ஆளுநராகப் பதவியேற்றார். 1947 – இந்தியா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று பொதுநலவாய அமைப்பின் கீழ் தனி நாடாகியது. ஜவகர்லால் நேரு முதலாவது தலைமை அமைச்சர் ஆனார். 1948 – தென் கொரியா உருவாக்கப்பட்டது. 1950 – அஸ்ஸாமில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் காரணமாக 574 பேர் பலி, 5,000,000 பேர் வீடிழந்தனர். 1960...